சாய்ந்தமருது பெண்கள் சந்தையில் தொற்றா நோய் தடுப்பு பரிசோதனை !
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெண்கள் சந்தை பகுதியில் தொற்றா நோய் தடுப்பு பரிசோதனை நிகழ்வு இன்று (12) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும், பெண்கள் சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் அங்கு வருகை தரும் மக்களுக்காக தொற்றா நோய் தடுப்பு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வின் போது, பங்கேற்பாளர்களுக்கு குருதிச் சீனி பரிசோதனை (Random Blood Sugar Test) மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சீரான உணவு முறை, மற்றும் நீண்ட நாள் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் பங்கேற்றனர். இதன்போது சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச மக்கள் நன்மை அடைந்தனர்.
No comments