Column Left

Vettri

Breaking News

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை- அம்பாறை




பாறுக் ஷிஹான் நாடெங்கிலும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாக நடைபெற்று வருகின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் ஞாயிற்றுக்கிழமை (10) நாடெங்கிலும் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று கல்வி வலயங்களில் இன்று இப்பரீட்சை ஆரம்பமானதுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றதை காண முடிந்தது.அத்துடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு பெற்றோருடன் வருகை தந்திருந்தனர். மேலும் பரீட்சை நிலையங்களுக்கு சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் வருகை தந்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எனினும்இ அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும். மாணவர்கள் காலை 9 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். இரண்டாம் பகுதி வினாத்தாள் முதலில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இரண்டாம் பகுதி வினாத்தாள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி 10.45 மணிக்கு நிறைவடையும். அதன் பிறகு அரை மணி நேரம் இடைவேளை வழங்கப்படும்.முதலாம் பகுதி வினாத்தாள் காலை 11.15 மணிக்கு வழங்கப்படும். இந்த வினாத்தாள் ஒரு மணி நேரம் கொண்டதாகும். குறித்த வினாத்தாள் மதியம் 12.15 மணிக்கு நிறைவடையும்.
பரீட்சை இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால் 117 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு அளிக்கலாம். இதற்காக விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments