Column Left

Vettri

Breaking News

சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் முகமாக விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு!!




பாறுக் ஷிஹான்

சுகாதாரதுறையினை    வினைத்திறனுடன்  முன்னெடுக்கும் முகமாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று நடைபெற்றது.

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிரின்  நெறிப்படுத்தலில்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின்  பிரதி முதல்வர் அக்கரைப்பற்று இஆலையடிவேம்பு இதிருக்கோவில் இநிந்தவூர்இநாவிதன்வெளிஇஅட்டாளைச்சேனைஇகாரைதீவு பிரதேச சபைகளின்  தவிசாளர்கள்  கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது உள்ளூராட்சி மன்றங்கள் சுகாதார சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காகஇ உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து இவ்வாறான சந்திப்புகளை நடத்துகின்றனர். இதில்இ பொது சுகாதாரம்இ துப்புரவு மற்றும் நோய்த்தடுப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. சுகாதார மற்றும் சேவை வழங்களை மேம்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இவ்வாறு  இணைந்து சந்திக்கும் போது சுகாதாரதுறையினை    வினைத்திறனுடன்  முன்னெடுக்க உதவியாக ரக்கும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் குறிப்பிட்டார்.

இதன் போது அங்கு கருத்து தெரிவித்த உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளூராட்சி மன்றங்கள்இ பொது சுகாதாரம் தொடர்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்கள்இ துப்புரவு நடவடிக்கைகள்இ மற்றும் நோய்த்தடுப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ளூராட்சி மன்றங்கள் ஈடுபடுகின்றன.எதிர்காலத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையுட்ன இணைந்து  செயற்பட உறுதியாக உள்ளதாக சுட்டிக்காட்டினர்.

விசேடமாக  பிரதேச வைத்திசாலைகளின் வளப்பற்றாக்குறை மற்றும் அபிவிருத்தி   டெங்கு ஒழிப்பு திண்ம கழிவகற்றல் உட்பட பல விடயங்கள் காட்சித் திரை ஊடாக   ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments