Column Left

Vettri

Breaking News

மன்னார் - இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!!




 மன்னார் - இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில்  போக்குவரத்து அமைச்சிடம் செவ்வாய்க்கிழமை (22) அன்று   கேள்வியெழுப்பி உரையாற்றும் போது, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரே இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இதன்போது செல்வம் எம்.பி கூறுகையில், இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல் விடயத்தில் தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேசையை ஆரம்பிப்பது தொடர்பில் நீண்ட நாட்களாக பேசப்படுகின்றது. 

இந்தியாவும் இதனை முன்னெடுத்துச் செல்ல தயாராக இருக்கின்றது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்றார்.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவிக்கையில், மன்னார் - இராமேஸ்வரம் இடையே குறைந்தளவான போக்குவரத்து தூரமே உள்ளது. ஆனால் காரைக்கால் - காங்கேசன்துறை இடையிலான படகு சேவைகள் தொடர்பிலேயே அரசாங்கம் கூறுகின்றது. இது நீண்ட தூரமாகும். வடக்கில் இந்த சேவைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக வடக்கில் உள்ள மக்கள் நன்மையடைவர் என்றார். 


No comments