ஒலுவில், பாலமுனை பிரதேசங்களில் குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் ரஹ்மத் பவுண்டேசனினால் வழங்கி வைப்பு நிகழ்வு!!
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
ஒலுவில் மற்றும் பாலமுனை பிரதேசங்களில் நீர் வசதியின்றி வாழ்ந்துவரும் தேவையுடைய குடும்பங்களுக்கு, கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் குழாய் நீர் இணைப்பு மற்றும் பொதுக்கிணறுகள் அமைத்து வழங்கும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.
பிரதேச மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இந்த நற்செயல் நிகழ்த்தப்பட்டது.
மிகக் குறுகிய காலத்திற்குள் திட்டமிட்டு செயல்பட்டு பவுண்டேசன், குழாய் நீர் இணைப்புகளையும், பொதுக்கிணறுகளையும் பயனாளிகள் பாவனைக்காக திறந்து வைத்தது.
இந்த நிகழ்வில், பயனாளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
பிரதேச மக்கள் இதனை ஒரு பெரும் நிவாரணமாகவும், நீண்ட கால முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் வரவேற்றனர்.
No comments