Column Left

Vettri

Breaking News

விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி!




( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பவளவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

அதற்காக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னோடிக் கூட்டம் ஒன்று நேற்று  (19) சனிக்கிழமை இரவு பாடசாலையில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அதிபர் ம.சுந்தரராஜன், பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா,
பழைய மாணவர் சங்க செயலாளர் எல்.சுலக்ஷன் ஆகியோர் முன்னிலையில் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்தனர்.
 
விபுலானந்தாவில் கடந்த காலங்களில் கல்விகற்ற பழைய மாணவர்களின் Batch பிரதிநிதிகளினுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் பாடசாலை பவள விழா நடைபவனி தொடர்பாக மிகமுக்கியமான கலந்துரையாடலாக அமைந்தது.

பிரதிநிதிகள் கலந்துகொண்டு  தங்கள் கருத்துக்களை ஆலோசனைகளையும் வழங்கினர் .




No comments