Column Left

Vettri

Breaking News

கல்முனை பாலிஹாவில் உயிர் முறைமை தொழில்நுட்ப கண்காட்சியும் விழிப்புணர்வும்!!




நூருல் ஹுதா உமர்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) உயர்தர உயிர் முறைமை தொழில்நுட்ப (Biotech) பிரிவில் கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளின் ஏற்பாட்டில் அப்பிரிவின் பகுதித் தலைவர் எம்.எம்.எம். இசார்தீன் தலைமையில் கண்காட்சியும் விழிப்புணர்வும் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரிஸ் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கல்லூரி முதல்வர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் கலந்து கொண்டார்.

இக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வின் நோக்கமானது உயர்தர உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவின் பாடத்திட்டம், கற்கைநெறி, பல்கலைக்கழக அனுமதி அதிகரிப்பு செய்தல் அத்துறை சார்ந்த தொழில்நுட்ப பயிற்சியினை வழங்கி கனிஷ்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு செய்து இப்பிரிவில் உள்ளீர்ப்பு செய்வதாகும்.

மேலும் இந்நிகழ்வில் பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments