சம்பள அதிகரிப்பு; தொழில் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!
தேசிய சம்பள அதிகரிப்பு குறித்து தொழில் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இவ்வருடம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச சம்பளமாக 27,000 ரூபாவும் மற்றும் நாளாந்த சம்பளமாக 1,080 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே. வட்டலியெட்டா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டின் இலக்கம் மூன்றின் கீழான தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத் திருத்தத்தின் பிரகாரம், சகல ஊழியர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு ஏற்புடையதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு அமைவாக பட்ஜட் நிவாரணமாக வழங்கப்பட்ட 1,080 ரூபா சகலரதும் திருத்தப்பட்ட சம்பள அமைப்பில் இணைக்கப்பட வேண்டும் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 3,500 ரூபா நிவாரணத்துடன் மாதந்தோறும் 17,500 ரூபவை சம்பாதிக்கும் ஒரு ஊழியர் இதற்கமைவாக தற்போது 27,000 ரூபாவை குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளமாகப் பெறுவதற்கு உரித்துடையவர் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
No comments