வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்!!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன்
ஆரம்பமானது. திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையிலே திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
பத்தாம் நாள் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா எதிர்வரும் 19ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. இந்நிலையில், 24ஆம் திருவிழாவான தேர்த் திருவிழா 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, அன்று மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் நிறைவடையவுள்ளது.
No comments