சர்வதேச ரோயல் சிறப்பு விருது-2025 இல் முஹம்மத் றிசான் ஷேக் அமானி வியாபார விருதை வென்றார்!!
நூருல் ஹுதா உமர்
இலங்கையின் 2025 ம் ஆண்டின் சிறந்த வியாபார அங்கீகாரத்திற்கான விருது சமூக சேவையாளரான, மன்னாரைச் சேர்ந்த முஹம்மத் றிசான் ஷேக் அமானி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2025.07.27 ம் திகதி இடம்பெற்ற பல்துறை சாதணையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வின் போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இன்டர்நேஷனல் ரோயல் சிறப்பு விருது-2025 (ROYAL EXCELLENCE AWARD 2025) சர்வதேச தளத்தில் இலங்கையின் வியாபார திறமையாளர்களை அடையாளப்படுத்தும் ஒன்றாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீ ரோயல் அரக்கட்டளை அமைப்பு ( SRI RAJAKEEYA PADANAMA) மற்றும் ஐக்கிய நாடுகள் பேர்ட்டல் (UN PARTNER PORTAL) அமைப்பும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அங்கீகாரம் பெற்ற ஸ்ரீராஜகிய பதனம அமைப்பின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைவர் தேசமான்ய பேராசிரியர் கலாநிதி சின்தக சமன் குமார அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடா நாட்டின் சர்வதேச வர்த்தகரும், முதல் நிலை தொழிலதிபருமான கமலஜீத் கம்பா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த நிகழ்வில் சான்றிதழ்களையும், நினைவு சின்னங்களையும் வழங்கி வைத்தார்.
இலங்கையில் முதற் தடவையாக இவ்வாறான சர்வதேச அங்கீகாரம் வழங்கும் வியாபாரத்துறைக்கான விருது வழங்கும் நிகழ்வு இடம் பெற்றமை வரலாற்று பதிவாகும்.
மிகவும் இளம் வயதில் வர்த்தக ரீதியான அனுபவத்தை கொண்டவராக ஷேக் அமானி இதன் போது பாராட்டப்பட்டார். சுமார் 20 வருடகால தமது தொழிற் துறையினை கட்டியெழுப்பி கட்டிட மற்றும் ரியல் எஸ்டேட் விற்பனைத் துறையிலும் அவரது பணி வியாபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments