சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக மாணவிகளை விழிப்பூட்டும் செயலமர்வு!!
நூருல் ஹுதா உமர்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளுக்கு மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளும் நோக்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில் கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் ஸ்மார்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதான வளவாளராக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவின் பொறுப்பதிகாரியான ஏ.எல்.ஏ. வாஹீத் அவர்கள் கலந்து கொண்டார்.
மேற்௯றித்த செயலமர்வில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல் அதிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல், துஷ்பிரயோகத்தின் வகைகள், அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு கையாளுதல், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான சட்டங்கள் மற்றும் நடைமுறையை அறிந்து கொள்ளுதல் என்பது பற்றிய தகவல்களை நிகழ்த்துகை மூலம் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு குழு தலைவர், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments