Column Left

Vettri

Breaking News

இன்று சிறப்பாக நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின் கன்னி அமர்வு ( வி.ரி.சகாதேவராஜா)




 நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் இன்று (9) வியாழக்கிழமை காலை 9 :30 மணியளவில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.


பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் அனைத்து உறுப்பினர்களின் சத்திய பிரமாணத்துடன்  ஆரம்பிக்கப்பட்டது.

தவிசாளர்  தனது கன்னி உரையில்

நாவிதன்வெளி  பிரதேச சபையின் தவிசாளர் என்ற இந்த உயரிய பதவியில் என்னை அமர்த்திய பிரதேச பொதுமக்களுக்கும்,  இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைகளுக்கும் ,அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுக்கும், எனது அரசியல் வழிகாட்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா  கலையரசன் அவர்களையும் விழித்துக் கொண்டு உப தவிசாளர் தம்பி புவனரூபன் , நாவிதன்வெளி பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் விழித்தவனாக , சபையின்   செயலாளர் அவர்களையும் விழித்துக் கொண்டு பார்வையாளர்கள் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம்.

எனது கன்னி உரையை ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன்.


நமது நாவிதன் வெளி பிரதேச சபை 2006 ஆம் ஆண்டு தனி ஒரு பிரதேச சபையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை படிப்படியாக வளர்ச்சி அடைந்து சிறப்பான பிரதேச சபையாக விளங்குகின்றது.

 இதற்கு இச்சபையின் முன்னை நாள் தவிசாளர்கள்,  உப தவிசாளர்கள் பதவிக்கால உத்தியோஸ்தர்கள் அனைவரது சிறப்பாக செயல்பாடுகளே காரணமாக அமைந்தது அத்தகைய ஒத்துழைப்பு எமக்கும் தேவைப்படுகின்றது.

இன மத மொழி கலாச்சார அடிப்படைவாத சித்தாந்தங்களை மறந்து நாவிதன்வெளி பிரதேசத்தில் எமது மக்களை  பிரதிநிதித்துவப்படுத்தி ஒற்றுமையுடன் கூடியிருக்கின்றோம்.

எமக்கு வாக்களித்து வாக்களிக்காத மக்கள் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலைக் கடந்து சேவையாற்ற உறுதி கொண்டிருக்கின்றோம்.
 இதுவே உறுப்பினர்கள் அனைவரது இலக்கும் பணியுமாக இருக்க வேண்டும். 



அனைத்து உறுப்பினர்களும்  எமது நாவிதன்வெளி பிரதேச சபைக்கு மாத்திரமல்ல இந்த முழு பிராந்தியத்திற்கும் வெகுமானத்தை தேடி கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.  
அதுவே  எமது மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றுவது எமது தலையாய கடமை.

இதற்கு ஏற்றால் போல் உப தவிசாளர் ,கௌரவ உறுப்பினர்கள் அனைவரும்  எமது பிராந்தியத்தினை முன்னேற்றுவதற்கான  திட்ட வரைபுகளை வகுத்து அரச மற்றும் அரச சார்பற்ற துறைகளை அணுகி எமது பிரதேசத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல தவிசாளர் என்ற ரீதியில் எனது பணி, பங்களிப்பு அனைவருக்கும் எப்போதும் 100 வீதம் எப்போதும் இருக்கும். 

துறை சார் அமைச்சர்களையும் அல்லது நிறுவனங்களின் தலைவர்களை அணுகி அபிவிருத்திகளை மேற்கொள்ள நானும் உறுதுணையாக  நிற்பேன்,  .

எம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்காக எம்முடைய அதிகார எல்லைக்குட்பட்டு சேவையாற்ற கடமைப்பட்டிருக்கின்றோம்.


34/% முஸ்லிம்கள் வாழும் இந்த பிரதேசத்தில் அந்த மக்களுக்கான நீதியானது நியாயமான விகிதாசார அடிப்படையிலான ஒதுக்கீடுகளும் அபிவிருத்திகளும் சரியாக நடைபெறும் என்பதனை  கூறிக்கொள்ள நான் விரும்புகின்றேன்.

ஏனெனில் நான் இன மத பாகுபாடு கடந்த எல்லைக்கப்பால் அப்பால் நின்று  சேவையாற்றும் மக்கள் பணியாளன்.


நாம் மக்களுக்கான அரசியலை மேற்கொள்ளவே எம் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை உறுதியுடன் ஏற்றிருக்கின்றோம். கட்சி சார்ந்த தேர்தல் அரசியலை தேர்தல் காலத்தில் சந்தித்து கொள்வோம். 

எமக்குத் தேவையானது எமது சாமானிய மக்களுக்கு துரிதமானதும் இலகுவானதுமான சேவையை. 

எமது பிரதேசத்தில்  மக்கள் கொடுத்த ஆணையை கொண்டு மக்களுடன்  இணைந்து செயல்பட வேண்டும் என்பதனை பல்வேறு அரசியல் கட்சி சுயேட்சை குழுக்களூடாக அங்கம் வகிக்கும் கௌரவ உறுப்பினர்கள் ஆகிய உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

இனவாதத்தினை விதைத்து இனங்களுக்கு இடையே முரண்பாட்டினை தோற்றுவிக்கும் மதவாத அரசியல் அல்லது கட்சி சார்ந்த அரசியலை  தவிசாளர் எந்த வகையில் எனக்கோ , எனது சக உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றேன்.

எமது பிரதான இலக்கு சமூகங்களுடைய ஒற்றுமை நிலையான நிலையான வருமானம், குறிப்பாக கல்வியிலும்  பொருளாதாரத்திலும் எமது நாவிதன்வெளி , பிரதேசம் இந்த நாட்டிற்கு ஒரு முன்னோடியான எடுத்துக்காட்டான பிரதேசமாக  மாற்றுவது நம் அனைவரதும் தலையாய கடமையும்  பணியும் இலக்கும் இருக்கவேண்டும் என தனது கன்னி உரையில் குறிப்பிட்டார்.





No comments