பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கிட்டில் காத்தான்குடி வாவிக்கரை வீதி புனரமைப்பு..!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வருட பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் 14 பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு கிடைத்த சுமார் 3 மில்லியனுக்கான வேலைத்திட்டம் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் எல் ஏ எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களினால் முன்மொழியப்பட்டு, பிரதேச அபிவிருத்திக்குழுவின் அனுமதியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "வாவிக்கரை வீதியினை முழுமைப்படுத்தும்" குறித்த வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (18) காத்தான்குடி வாவிக்கரை சதுக்கத்தில் இடம்பெற்றது.
No comments