அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை !!
சுற்றுலாத் துறைக்குத் தேவையான அரிசியைத் தவிர, வேறு எந்த அரிசி வகைகளும் தற்போது இறக்குமதி செய்யப்படமாட்டாதென, விவசாயம் மற்றும் கால்நடை வளத் துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சிறுபோக நெல் அறுவடை விரைவில் ஆரம்பமாகவுள்ளதால், நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சில வகையான அரிசி வகைகள்,இறக்குமதி செய்யப்பட்டாலும், விவசாயிகள் இது குறித்து எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.
No comments