வாகூரவெட்டையில் வைத்திய முகாம்!
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு இலவச வைத்திய முகாம் ஒன்றை நடாத்தினர்.
உகந்தமலை நுழைவாயிலில் இருந்து காட்டுப்பாதையில் பயணிக்கும்போது தரிக்கும் முதலாவது தரிப்பிடமான வாகூரவெட்டையில் இம் முகாம் நேற்று முன்தினம் நடாத்தப்பட்டது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணனின் ஒழுங்கமைப்பில் வைத்திய குழுவினரும், தமிழ் இளைஞர் சேனையின் தலைவர் அ. டிலாஞ்சன் தலைமையிலான இளைஞர் சேனை உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.
யாத்திரிகர்கள் செல்லும் வழியான வண்ணாத்திர கிணற்றடியில்( வாகூரவெட்டை)இந்த வைத்திய முகாம் நடாத்தப்பட்டதால் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அடியார்கள் தெரிவித்தனர்.
வாகூரவெட்டையில் வைத்திய முகாம்!
Reviewed by Thanoshan
on
7/01/2025 08:24:00 AM
Rating: 5
Reviewed by Thanoshan
on
7/01/2025 08:24:00 AM
Rating: 5


No comments