Column Left

Vettri

Breaking News

அம்பறைமாவட்ட காரைதீவு கூடை பந்தாட்ட அணி vaaj கூடைபந்தாட்ட தொடரின் சம்பியனானது.




(வெற்றிநியூஸ் நிருபர்)

இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்ற்பாட்டில் 23 வயதிற்குட்பட்ட வீரர்களை உள்ளடக்கிய vaaj junior premier league கூடைப்பந்தாட்ட போட்டியானது 15 மாவட்டங்களின் பங்குபற்றுதலுடன் மாத்தறையில் 9,10,11,12 திகதிகளில் இடம்பெற்று வருகின்றது 


இச் சுற்றுப்போட்டி தொடரில் அம்பாறை மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் காரைதீவு கூடைப்பந்தாட்ட  அணியானது குழு A யில் இடம்பிடித்து முதலாவது போட்டியில் வவுனியா மாவட்ட அணியினருடன் மோதி 19:74 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டி 2 வது போட்டியில் மாத்தளை மாவட்ட அணியுடன் மோதி 71:25 எனும் புள்ளியினை பெற்று மாத்தளை மாவட்ட அணியினை 46 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி அம்பாறை மாவட்ட அணி கால் அரையிறுதி சுற்றுக்கு தெரிவானது.


கால் அரையிறுதியில் நுவரெலியா மாவட்டத்தினை அம்பாறை மாவட்ட அணி எதிர்கொண்டு 59:40 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.  அரையிறுதி போட்டியில் மாத்தறை மாவட்ட அணியுடன் மோதி 58:46 புள்ளியினை பெற்று வெற்றியீட்டி. 

இறுதி போட்டியில் அம்பாறை மாவட்ட அணி பதுளை மாவட்ட அணியினை எதிர் கொண்டு 53:50 புள்ளியினை பெற்று vaaj junior premier league இன் சம்பியனானது.




No comments

Subscribe Us