Column Left

Vettri

Breaking News

போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு




 பாறுக் ஷிஹான்

 
போதைப் பொருள் பாவனை தொடர்பில்  பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு  நிகழ்வு    திங்கட்கிழமை (30) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் நடைபெற்றது.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.டி.எம்.ஜனுபர் தலைமையில்  தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றசாட்,  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்  ஆகியோரால் போதைப் பொருள் பாவனை  தொடர்பில்  விழிப்புணர்வு  செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த நிகழ்வில்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர்,  , பிரதி அதிபர் ஏ.ஆர்.எம்.உவைஸ்,சம்மாந்துறை பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு சிகிச்சை அழிப்பு மற்றும் புனர்வாழ்வு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.இக்ராம், ஆசிரியர்கள் ,  பலரும் கலந்து கொண்டனர். 





No comments