காரைதீவில் ஐம்பது வறிய பண்ணையாளர்களுக்கு கலவன் கோழிக் குஞ்சுகள் !!
( வி.ரி.சகாதேவராஜா)
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் கிழக்கு மாகாணத்தினால் PSDG-2025 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காரைதீவு கால்நடை வைத்திய பிரிவுக்குட்பட்ட 50 வறிய பண்ணையாளர்களுக்கு தலா 20 வீதம் ஒரு மாத வயதுடைய கலவன் கோழிக் குஞ்சுகள் காரைதீவு கால்நடை வைத்திய அலுவலகத்தில் நேற்று முன்தினம் 04.06.2025ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் நீண்டகால நோக்கில் பயனாளிகளினுடைய போசாக்கு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதோடு அவர்களுக்குரிய வருமானம் ஒன்றை பெற்றுத் தருவதுடன், வறுமை ஒழிப்பை நோக்காகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்நிகழ்வு அம்பாரை மாவட்டத்தில், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் எம்.நௌஷாத் ஜமால்டீன் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது காரைதீவு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி மருத்துவர் திருமதி.எச்.ஹானா தலைமையின் கீழ் பயனாளிகளுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கும், கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
காரைதீவில் ஐம்பது வறிய பண்ணையாளர்களுக்கு கலவன் கோழிக் குஞ்சுகள் !!
Reviewed by Thanoshan
on
6/06/2025 12:17:00 PM
Rating: 5
Reviewed by Thanoshan
on
6/06/2025 12:17:00 PM
Rating: 5




No comments