Column Left

Vettri

Breaking News

நிந்தவூர் பொலிஸ் நிலைய மாதாந்த அணிவகுப்பு பரிசோதனை




 பாறுக் ஷிஹான்


நிந்தவூர்   பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025  ஆண்டிற்கான  மாதாந்த   அணிவகுப்பு  மரியாதையும் பரிசோதனையும்   பொலிஸ் நிலைய வளாகத்தில்  இன்று காலை நடைபெற்றது.

நிந்தவூர்  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ்.  நிசாந்த வெதகே   தலைமையில்     நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையில்  அக்கரைப்பற்று   பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண  கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார முறைகள்  உடைகள்  வாகனங்கள் ன்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையத்திலுள்ள பௌதீக வள பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இறுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிப்படுத்தல் வகுப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments

Subscribe Us