லஞ்சமா? ஊழலா? அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள் விவகாரப் பிரிவு ஸ்தாபிதம்!
( வி.ரி.சகாதேவராஜா)
தீர்க்கப்படாத புகாரா? லஞ்சக் கோரிக்கையா? உடனடியாக அறிவிக்கும்
பிரிவொன்று அம்பாரை மாவட்ட.செயலகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
உள் விவகாரப் பிரிவு (IAU) எனும் பெயரில் பயனுள்ள பொதுச் சேவையை பொது மக்களுக்கு வழங்கும் பொருட்டு இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஊழலைத் தடுத்தல் மற்றும் அரசு நிறுவனத்தில் புதிய கலாசாரத்தை ஏற்படுத்தி வெளிப்படைத்தன்மையை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், நெறிமுறை நிர்வாகத்தை ஊக்குவித்தல், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கெதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற மற்றும் பயனுள்ள பொது சேவையை வழங்குவது இப்பிரிவின் பிரதான நோக்கங்களாகும்
இதன்
ஒருங்கிணைப்பு அதிகாரியாக மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.தொடர்பு களுக்கு மாவட்ட செயலாளர், உள்துறை பிரிவுத் தலைவர், மாவட்ட செயலகம், அம்பாறை.
தொலைபேசி எண் - 063- 2053696
வட்ஸ்அப் எண் - 071-5506030
மின்னஞ்சல் முகவரி - iau.ampara.distses@gmail.com
லஞ்சமா? ஊழலா? அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள் விவகாரப் பிரிவு ஸ்தாபிதம்!
Reviewed by Thanoshan
on
6/25/2025 10:11:00 AM
Rating: 5
Reviewed by Thanoshan
on
6/25/2025 10:11:00 AM
Rating: 5

No comments