Column Left

Vettri

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுடனான ஒன்று கூடல்

 பாறுக் ஷிஹான்


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்  கிழக்கு மாகாண அங்கத்தவர்களின்  நலன் கருதி மாவட்ட ரீதியான  ஒன்று கூடல்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுடனான விசேட ஒன்று கூடல் இன்று  மாலை   அட்டாளைச்சேனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வானது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஸ்ட  ஊடகவியலாளர் அல்-ஹாஜ்.என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில்  அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்  அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும்   பாராளுமன்ற உறுப்பினறுமான அபூபக்கர் ஆதம்பாவா, முன்னாள் அமைச்சரும்  அக்கறைப்பற்று  மாநகர சபை முதல்வருமான  அதாவுல்லாஹ் , லேக் ஹவுஸ் பணிப்பாளர் (ஆசிரிய பீடம் ) சிசிர யாப்பா ,ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஸாதிக் ஷிஹான், உட்பட மற்றும் அதிதிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் உட்பட   கிழக்கு மாகாணத்தின்   அம்பாறை மாவட்டத்தில் வதியும் போரத்தின் அங்கத்தவர்களான அச்சு  இலத்திரனியல் மற்றும் இணையதள ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.



அத்துடன் இக்கலந்துரையாடலில்  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் நலன் சார் விசேட கலந்துரையாடல்  கலை  கலாச்சார மற்றும் அறிமுக நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.

இத தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அம்பாறை மாவட்டத்தில் அதன் அங்கத்தினர்களுடனான ஒன்று கூடலை நடத்துவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.









No comments