Column Left

Vettri

Breaking News

45 நாட்களில் பொத்துவிலைச் சென்றடைந்த யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள்




 ( வி.ரி. சகாதேவராஜா)


யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 45 நாட்களில் இன்று பொத்துவிலைச் சென்றடைந்தனர்.

முன்னதாக யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் ஷீரடி சாய்பாபா கோவிலில் முழுநாளை கடத்தினர்.

அங்கு அவர்கள் சிரமதான பணியையும் மேற்கொண்டனர்.

கிழக்கிலங்கையில் பெரிய ஷீரடி என்று மக்களால் போற்றப்பட்டுவரும் அம்பாறை மாவட்டம் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தின் வருடாந்த கதிர்காம பாத யாத்திரிகர்களுக்கான சேவைகள் இவ்வருடமும் நடைபெற்றது.

இலங்கையில் வட மகாணத்திலும் மற்றைய பாகங்களில் இருந்து வரும் யாத்திரிகர்கள் தங்கி இருந்து அவர்களின் களைப்பைப் போக்கி உணவருத்தி மற்றும் நீராடி அவர்களின் கடமைகளை முடித்தும் செல்லுவதற்கு அமைவாக ஷீரடி சாயி கருணாலயத்தின் சேவைகள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஷீரடி சாயி கருணாலயத்தின் செயலாளரும் சமுகசெயற்பாட்டாளருமான ஜே. கே. யதுர்ஷனின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கோவில் காஞ்சிரன் குடா இராணுவத்தினரின் கட்டளை அதிகாரி மற்றும் அம்பாறை மாவட்ட சிவதொண்டர் அமைப்பின் ஊடாகதினசரி குடிநீர் மற்றும் சாதாரண நீர்கள் வழங்கும் சேவையும் ஆலயத்தில் இடம்பெற்று வருகிறது.

இது வரை ஷீரடி சாயி கருணாலயத்தில் 300க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் வருகை தந்து சேவைகளைப் பெற்று கதிர்காமம் நோக்கிய யாத்திரையை தொடங்கியுள்ளனர்.





No comments

Subscribe Us