Column Left

Vettri

Breaking News

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில் அடிக்கல் நடுதல் நிகழ்வு




 பாறுக் ஷிஹான்


'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம்  பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால்   இன்று (13)  ஆரம்பித்து வைக்கப்பட்டது

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள்  சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளியின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினறுமான அபூபக்கர் ஆதம்பாவாவினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆசிக், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட முகாமைத்துவ தொழிநுட்பம் , மற்றும் அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.




No comments

Subscribe Us