பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவைச் சேர்ந்த பழம்பெரும் ஆங்கில ஆசானும் கல்முனை வலய ஆங்கிலபாட ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளருமான இரா.சண்முகநாதன்( வயது 80) நேற்று புதன்கிழமை சிவபதமடைந்தார்.
நேர முகாமைத்துவம் நேர்முக வர்ணனை மற்றும் நேர்த்தியான செயற்பாடுகளுக்கு துறைபோன சண் மாஸ்ரர் என அழைக்கப்படும் சண்முகநாதன் காரைதீவு
விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும், காரைதீவு கோட்டக் கல்விப் பணியகத்தில்திட்டமிடல் உத்தியோகத்தராகவும், கல்முனை வலய ஆங்கிலபாட ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் காரைதீவு விளையாட்டு கழக போசகராகவும் இவ்வாறு பல நடிபங்குகளில் சேவையாற்றியவர்.
No comments