Vettri

Breaking News

அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!




 ( வி.ரி.சகாதேவராஜா)


2025 ஆண்டிற்கான அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை மாநகர சபை தவிர்ந்த 19 உள்ளுராட்சி மன்றங்களுக்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் மே 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 4,78000  வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்
 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதில் 202 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகும்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக  இது வரையும் 385 சிறு சிறு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளது என்று 
 மாவட்ட தேர்தல் அத்தாட்சி அதிகாரியும்.அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்ரம  தெரிவித்தார்.

அம்பாறை,சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளில்  உள்ளூராட்சி மன்ற  தேர்தலில் போட்யிடும் வேட்பாளர்கள் மற்றும்  ஆதரவாளர்களின் குழுக்களுடையே வேட்பாளர்களின் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டுவதில் ஏற்றபட்ட சம்பவங்களே  தேர்தல் வன்முறைச் சம்பவங்களாக பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு இயங்கி வருவதோடு, ஒவ்வொரு பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலகங்கள் என்பவற்றிலும்  தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவுள் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

24 மணி செயற்படும் வகையில் முக்கி கேந்திர நிலையங்களில் பொலிஸாரும் முப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகளை் பொலிஸாரினால் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

No comments