Vettri

Breaking News

ஆவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரை சந்தித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்




 பாறுக் ஷிஹான்


இலங்கைக்கான ஆவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின்  அழைப்பின் பேரில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக்குழு தலைவரும் இலங்கை அரசியல் பேரவை உறுப்பினருமான   பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவுடனான   சிநேக பூர்வ சந்திப்பு புதன்கிழமை(30)  Galoya Lake Club restaurant ல் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு பிராந்தியத்தினுடைய மீன்பிடி,விவசாயம்,கைத்தொழில், கல்வி,உயர்கல்வி, விளையாட்டு, சுகாதாரம்,பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமகால அரசியல் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மக்களுடைய தேவைகள் தொடர்பாக உயர்ஸ்தானிகருக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

எதிர்வரும் நாட்களில் இவ் அபிவிருத்திகள் தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்தைக்காக பாராளுமன்ற உறுப்பினரை மீண்டும் சந்திக்க தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதே வேளை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் உயர்ஸ்தானிய குழுவினர்களுடன் அம்பாறை மாவட்டத்தின் சமுக பொருளாதார மற்றும் அரசியல் தொடர்பான கலந்துரையாடலில்  அவரது  அலுவலகத்தில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







No comments