Vettri

Breaking News

இன்று காரைதீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!




( வி.ரி. சகாதேவராஜா)

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு
வழமைபோல் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இன்று (14)  புதன்கிழமை காரைதீவு  பொதுச் சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

 முன்னதாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன . பலரும் உரையாற்றினர்.
நிறைவாக அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி  அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பொலிசாரும் படம் பிடித்தனர்.

இதேபோல் இவ் வாரம் பூராக மாவட்டத்தில் சகல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












No comments