Column Left

Vettri

Breaking News

சித்ராபௌர்ணமி நடுநிசியில் வேலோடுமலையில் மெய்சிலிர்க்கும் மாபெரும் குபேர வேள்வி யாகம்.




 









(வி.ரி.சகாதேவராஜா)

கடந்த சித்ரா பௌர்ணமியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி இலுக்குப் பொத்தானை வேலோடும் மலையில் அபூர்வ மூலிகைகளிலான மெய்சிலிர்க்கும் அற்புதமான குபேர மகா வேள்வி யாகம்   உணர்வு பூர்வமாக நடைபெற்றது .

இதற்கென விசேடமாக இந்தியாவில் இருந்து வருகைதந்த ஒரு மாபெரும் குபேரயோகி, குபேர குருஜி ஸ்டார் ஆனந்த் அவரது குழுவினருடன் இம் மாபெரும் யாகத்தை செய்தார்.

வேலோடுமலை முருகனாலய தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் தியாகராஜா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ பிரதான பாகமேற்று யாகத்தை வழி நடாத்தினார்.

முன்னதாக அருகில் உள்ள மலையில் நாக வழிபாடு நடைபெற்றது.

அன்று இரவு நடுநிசியில் இலங்கையில் சித்தர்கள் வாழும் வேலோடும் மலையில் பதினெண் சித்தர்கள் சன்னிதியில் அபூர்வ காய கல்ப மூலிகைகளை கொண்டு ஒரு மாபெரும் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி நடைபெற்றது.

அத்துடன் எல்லோருக்கும் அதிசூட்சமமான தன யோக ஆகர்சண குபேர சங்கல்பத்தை செய்து சக்தி வாய்த்த குபேர தீக்ஷையும் வழங்கினார்.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைவர் ஆதித்தன் உபதலைவர் மனோகரன் நமசிவாய மகேஸ்வரன் சுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments