கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி வலைப்பந்தாட்டம் மற்றும் எறிபந்தாட்டப் போட்டிகளில் சம்பியனாக தெரிவு
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி 125 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கல்முனை வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டம் மற்றும் எறிபந்தாட்டப் போட்டிகளில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 16,18 வயதுக்கு உட்பட்ட பெண் மாணவர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள், 17,20 வயதுக்கு உட்பட்ட பெண் மாணவர்கள் மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண் மாணவர்களுக்கான எறிபந்தாட்டப் போட்டிகளில் இந்த பாடசாலையின் அணிகள் சம்பியனாக வெற்றி ஈட்டியுள்ளதோடு மாகாண மட்டப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வலைப்பந்தாட்ட மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி ஹயாளினி சிவாகரன் அவர்களுக்கும், பயிற்றுவிப்பாளரான க.தரிஷாந்தன் அவர்களுக்கும் , எறிபந்தாட்டப் போட்டியின் பயிற்சிக்கு பொறுப்பாக இருந்த அருட்.சகோ.ஏ.தேவராஜா அவர்களுக்கும் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றுவதற்கு மாணவர்களை ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
No comments