Vettri

Breaking News

இன்று அம்பாறை மாவட்டத்தில் சுமுகமான வாக்களிப்பு! தமிழ் பிரதேசங்களில் மந்தகதியில் வாக்களிப்பு




 ( வி.ரி. சகாதேவராஜா)


 அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை மாநகர சபை தவிர்ந்த 19 உள்ளுராட்சி மன்றங்களுக்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் இன்று மே 6 ஆம் தேதி சுமுகமாக நடைபெறுகிறது.

கல்முனை மாநகர சபை தவிர்ந்த ஏனைய 19 சபைகளுக்கான தேர்தல் இன்று சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக நண்பகல் வரை தமிழ் பிரதேசங்களில் மந்தகதியில் வாக்களிப்பு நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது.

அம்பாறை மாவட்டத்தில் 4,78000  வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்
 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதில் 202 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகும்.

மாவட்டத்தில் 202 வட்டாரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.







No comments