Column Left

Vettri

Breaking News

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை விபத்து!!




 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை விபத்து



தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று காலை பாரிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.


மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் பயணித்த வேன்,

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வேனில் பயணித்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் மாத்தறை முலட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.


1990 ஆம்புலன்ஸ் சேவையினூடாக விபத்தில் காயமடைந்தவர்களை விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பிரதேசவாசிகளும் போலிஸாரும் நடவடிக்கையெடுத்தனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலிம்படை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments