Column Left

Vettri

Breaking News

காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்




 (வி.ரி. சகாதேவராஜா)

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு வட்டாரங்களை வென்று முன்னணியில் உள்ளது.

நான்கு பிரதான வேட்பாளர்களுள் ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வெற்றி வாகை சூடிய உள்ளார்.

வட்டாரம் 3 இல் 
இலங்கை தமிழரசுக் கட்சி. 786 வாக்குகளைப் பெற்று 
வெற்றி வாகை சூடியுள்ளது.
அதன்படி அவ்வட்டாரத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர் ஆசிரியர்  சுப்பிரமணியம் பாஸ்கரன் ( முன்னாள் உறுப்பினர்) உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வட்டாரம் 4 இல்
இலங்கை தமிழரசுக் கட்சி. 981 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.
அதன்படி அவ்வட்டாரத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர் பட்டதாரி ஆசிரியர் வை.கோபிகாந்( முன்னாள் தவிசாளர்) உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

வட்டாரம் 6 இல் 
இலங்கை தமிழரசுக் கட்சி. 812 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.
அதன்படி அவ்வட்டாரத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர்  மாவடி கந்தசாமி ஆலய செயலாளர் சின்னத்தம்பி சிவகுமார்  உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


வட்டாரம் 7 இல்
இலங்கை தமிழரசுக் கட்சி. 1101 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.

அதன்படி அவ்வட்டாரத்துக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளர் பிரபல சமூக செயற்பாட்டாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( முன்னாள் தவிசாளர்) உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதன் படி காரைதீவு பிரதேச சபையில் உள்ள ஏழு வட்டாரங்களில் நான்கு வட்டாரங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி ஈட்டியுள்ளது. மிகுதி மூன்று வட்டாரங்கள் முஸ்லிம் பிரதேசங்களாகும்.

No comments

Subscribe Us