Column Left

Vettri

Breaking News

தென்கிழக்கு பல்கலையில் இந்து- ஸ்ரீலங்கா உருதுக் கவிதைகள் தொடர்பான செயலமர்வு




 நூருல் ஹுதா உமர் 


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் மொழித் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்து- ஸ்ரீலங்கா உருதுக் கவிதைகள் தொடர்பான செயலமர்வொன்று மொழித் துறைத் தலைவர் கலாநிதி ஏ. விக்கிரமரத்ன தலைமையில் பீடத்தின் கேட்போர் கூடத்தில் 2025.04.25 ஆம் திகதி இடம்பெற்றது.

மொழிகள் தொடர்பான விரிவுரையாளர்கள் மாணவர்கள் பங்குகொண்டிருந்த இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கலந்து கொண்டார்.

நிகழ்வுக்கு இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த இந்திய உருதுக் கவிஞர் மற்றும் பேராசிரியர் முஹமத் மசூத் அஹமத் விஷேட பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வின்போது பீடாதிபதி உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினரால் விஷேட பேச்சாளர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

 அதேவேளை பேராசிரியர் முஹமத் மசூத் அஹமத் பல்கலைக்கழக நூலகத்துக்கு ஒரு பகுதி நூல்களை பீடாதிபதியிடம் ஒப்படைத்தார்.
பேராசிரயரோடு இணைந்து சபுத்தி (Sabuddi) அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலில், பேராசிரியர் எம்.ஏ.எஸ்.எவ். சாதியா, சிரேஷ்ட விரிவுரையாளர்களான என். சுபராஜ், கே.ஆர். பாத்திமா சீபா, விரிவுரையாளர் ஏ. அப்துல் ரஸ்ஸாக் உள்ளிட்டவர்களுடன் மாணவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.





No comments