Vettri

Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் இணைவு...






 பாறுக் ஷிஹான்


 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு செயற்பாட்டாளர்கள் மற்றும்  ஆதரவாளர்கள்  ஐக்கிய சமாதான கூட்டமைப்பில்  இணைந்த கொண்டுள்ளனர்.


2025 ஆண்டிற்கான உள்ளாட்சித்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்காக போட்டியிடும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் மேற்படி மாளிகைக்காடு செயற்பாட்டாளர்கள் மற்றும்  ஆதரவாளர்கள் இளைந்தள்ளனர்.

செவ்வாய்க்கிழமை(29) இரவு அம்பாறை மாவட்டம் மாளிகை;காடு பகுதியில் நடைபெற்ற ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் பிரச்சார கூட்டத்தில் உத்தியோக பூர்வமாக இணைந்து தத்தமது ஆதரவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் தொழிலதிபர்  கலாநிதி ஹக்கீம் செரீப் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.  அகுவர்  ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களாக கடந்த காலங்களில்  செயற்பட்டு வந்த மாளிகைக்காடு மேற்கு வட்டார ஆதரவாளர்கள் எதிர்வரும்  தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின்   வேட்பாளர்களை ஆதரித்து இணைந்து கொண்டனர்.

மேலம் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வண்ணாத்திப் பூச்சி சின்னத்தின் வெற்றிக்காக அனைத்து மக்களும் முன்னின்று செயற்படுவார்கள் என  அவர்கள்  உறுதியளித்தனர்.

இது தவிர உள்ளாட்சித்தேர்தலுக்கான பரப்புரைகள் மே 3 சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 6 நடைபெறும். இந்தத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments