Column Left

Vettri

Breaking News

தென்கிழக்கு பல்கலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு....




 பாறுக் ஷிஹான்


புவியியல் தரவுகளை சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான அடிப்படை கருத்துகள், கருவிகள் மற்றும் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தும் குறுகிய காலப் கற்கைநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 2025.04.29 ஆம் திகதி புவியல்த்துறையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் தலைமையில் இடம்பெற்றது.

பிராந்தியத்தின் கல்வி மேன்பாட்டில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல்வேறு குறுங்கால கற்கை நெறிகளையும் முன்னெடுத்துவரும் சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தின் மூத்த பீடங்களில் ஒன்றான கலை கலாச்சார பீடமும் பல்வேறு குறுங்கால கற்கைநெறிகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில்  புவியல்த்துறை ஆரம்பித்துள்ள Short course in Geo-Informatics கற்கைகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் இந்நிகழ்வுக்கு பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீதின் ஆலோசனையின் கீழ் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வின்போது Short course in Geo-Informatics இன் இணைப்பாளர் விரிவுரையாள ஏ.எல். ஐயூப், சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலில், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச். முகம்மட் றினோஸ், ஆகியோரும் துறைசார்ந்த உரைகளை நிகழ்த்தினர்.

விரிவுரையாளர் எம்.எச்.எவ். நுஸ்கியாவின் நன்றியுரையுன் முடிவுற்ற குறித்த நிகழ்வில் சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ்.எம். ஐயூப், புள்ளிவிபரவியல் மற்றும் பொருளாதார துறையின் தலைவர் விரிவுரையாளர் எஸ். சந்திரகுமார், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். பௌசுல் அமீர், கலாநிதி ஐ.எல். முகம்மட் சஹீர், எம்.என். நுஸ்கியா பானு சிரே





No comments