Vettri

Breaking News

காரைதீவில் களைகட்டிய பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு விழா























 ( காரைதீவு சகா)


விசுவாவசு சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 42வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமுக நிலையமும் இணைந்து ASCO மற்றும் சொர்ணம் நகைமாளிகையினதும் இணை அனுசரணையுடன் நடாத்திய
'27வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா  கழகத் தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் மிகவும் கோலாகலமாக கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

பிரதான அனுசரணை வழங்கிய கல்முனை சொர்ணம் குழுமங்களின் ஸ்தாபக தலைவர் பிரபல நகை தொழிலதிபர் எம்.விஸ்வநாதன் கலந்துகொண்டு கல்விச் சாதனையாளர்களுக்கு பரிசுகளை வழங்கி வைத்தார். அவருடன் சொர்ணம் குழுமங்களின் கொழும்புக் கிளை சுந்தர் மற்றும் கல்முனைக் கிளை குணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
பரிசளிப்பு நிகழ்வில் அனுசரணை வழங்கிய அஸ்கோ நிறுவன செயலாளர் எஸ்.நந்தகுமார், கழக போசகர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார், தலைமை மருந்தாளர் ப.சந்திரமோகன், முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வைத்தனர்.

கபொத சா/த மற்றும் உ/ தரத்தில் சாதனை படைத்த மாணவர்கள் மைதானத்தில் மத்தியில் பகிரங்கமாக பெற்றோர் சகிதம் கௌரவிக்கப்பட்டனர்.





No comments