சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுற்றுச்சூழலை அழகுபடுத்த பயன் தரும் தென்னை மரக்கன்றுகள் நடும் திட்டம்...!
நூருல் ஹுதா உமர்
கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்றுச்சூழலை அழகு படுத்தும் செயற்பாடு இன்று (07) இடம்பெற்றது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அலுவலக வளாகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை நிலையை மேம்படுத்தலுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது பயன் தரும் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பசுமை நிறைந்த சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்குடன் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற தொடர் பராமரிப்பு முறைகள் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
இந்த திட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் புதிய ஓர் ஆரம்பம், இது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும்.
No comments