Column Left

Vettri

Breaking News

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பாரிய சிரமதானம் முன்னெடுப்பு




 பாறுக் ஷிஹான்


சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பாரிய சிரமதானத்தை   கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம்  இன்று(8) காலை முதல் மாலை வரை  மேற்கொண்டிருந்தது.

குறித்த சிரமதான முன்னெடுப்பானது அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மணல்சேனை சுவாமி  விபுலானந்தா வித்தியாலய சூழல் "கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka)   வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக  பெண்கள் சங்க உறுப்பினர்கள், பொதுமக்களின்   ஒத்துழைப்புடன் ஆரம்பமானது

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர்  வழிகாட்டுதலில் சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் தலைமையில் குறித்த சிரமதான முன்னெடுப்பானது  சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தின்  சுற்றுச் சூழல் பிரிவு, சமூகப் பொலிஸ் பிரிவு ,சிறுவர் பெண்கள் விசாரணப் பிரிவு, என்பன பங்கேற்றன.
 
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் பாடசாலை மற்றும் அதனை  அண்டிய பகுதிகளில் உள்ள குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் துப்பரவு செய்யப்பட்டன.இதன்போது   வீதியோரங்களில்  தேங்கிக் காணப்பட்ட கழிவுகளை பொலிஸார் அகற்றி  சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.





No comments