Column Left

Vettri

Breaking News

வடிகான்களுக்குள் கிரவல் கொட்டிய் இனந்தெரியாத நபர்கள் ; கிராம உத்தியோகத்தரின் முயற்சியால் தடுக்கப்பட்ட சட்டவிரோதமான நில அபகரிப்பு!!




காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள சதுப்புநில வயல் காணிகள் அனுமதியற்ற வகையில் மூடப்பட்டு வருகின்றன. இது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் காரைதீவு 01 குடியிருப்பு பகுதியில் இருந்து வெள்ள நீர் வடிந்து ஓடுவதற்காக அமைக்கப்பட்ட வடிகால் இனந்தெரியாத நபர்களினால் கிரவல் மண்ணிட்டு கடந்த (23) ஆம் திகதி மூடப்பட்டது. இது தொடர்பாக குறித்த பகுதி கிராம உத்தியோகத்தர் செ.கஜேந்திரன் அவர்கள் பிரதேச செயலாளருக்கு அறிக்கையிட்டதை தொடர்ந்து பொலீஸ் முறைப்பாட்டினையும் மேற்கொண்டு இருந்தார். 

இந்நிலையில் குறித்த கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளரின் அனுமதியோடு காரைதீவு  பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி , பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச தன்னார்வ தொண்டர்களோடு இணைந்து இன்றைய தினம்(30.03.2025)  குறித்த வடிகானில் உள்ள நிரப்பப்பட்ட கிரவல் மண் முற்றாக அகற்றப்பட்டது.






No comments

Subscribe Us