Column Left

Vettri

Breaking News

நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!!




 பாறுக் ஷிஹான்


வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நூகர்வேர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நூகர்வோர் அதிகார சபையின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று  நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் (தேசிய பாடசாலை) உயர்தர பிரிவு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி  பாடசாலையின் அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நூகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

இவ் விழிப்புணர்வு நிகழ்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட  நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி   இஷட்.எம் ஸாஜீத் மற்றும் புலன் விசாரணை அதிகாரி  ஏ.பி.எம் காமீல்,  ஏ.பீ.எம் றிப்சாத் ஆகியோருடன் பிரதி் அதிபர் மற்றும் பாடசாலையின் உயர்தரப் பிரிவு பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியார்களும் கலந்து கொண்டனர்.









No comments

Subscribe Us