Column Left

Vettri

Breaking News

கோயில்போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம்!!




 இன்று பட்டிருப்பு  வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக அதிபர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (07-02-2025) கோயில்போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மகிழ்ச்சியான பாடசாலை என்ற கருப்பொருளை மையப்படுத்தி பாடசாலைகளில் இக் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.  இங்கு நம்பிக்கை மிக்க  ஒழுக்கமுள்ள பாடசாலை சமூகத்தை உருவாக்குதல், சுற்றாடல் பேண்தகு தன்மையை மேம்படுத்தல், விரயங்களை குறைத்தல், தூய்மையானதும், பசுமையானதுமான சுற்றாடல், ஆரோக்கியமான பிரஜைகள், பல்வகையை மதிக்கும் மகிழ்ச்சியான வகுப்பறை போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் ஆகியன தொடர்பில்  வளவாளராக கலந்து கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இவ் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




No comments