Vettri

Breaking News

புலமையாளர்கள் கௌரவிப்பு!!!




2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கல்விசாரா  மற்றும் நிருவாக உத்தியோகத்தர்களின் சிறுவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் முனாஸ் மொஹீதின் தலைமையில் நூலக கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. 


இந்நிகழ்வானது பல்கலைக்கழக வரலாற்றில் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் கலாநிதி .யு .எல் .அப்துல் மஜீட் அவர்களும் கௌரவ அதிதியாக பதிவாளர் எம் .ஐ . நௌபர் , பல்கலைக்கழக பதில் நூலகர் எம் . சி.எம் . அஷ்வர் அவர்களும் விஷேட அதிதியாக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்க தலைவர் எஸ்.எல் .எம் தாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தினர் .


இந்த நிகழ்வில் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த 30 மாணவர்களுக்கும் ஊழியர் சங்க தலைவர், செயலாளர் பதிவாளர், உபவேந்தர் அவர்களினால் ஒப்பமிடப்பட்ட சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


மேலும் இதில் விசேட அம்சமாக சித்தியடைந்த பிள்ளைகளின் பெற்றோர்களான உத்தியோகத்தர்களது பெயரினையும் பிள்ளைகளது பெயரினையும் பதிவாளர் அவர்களே உத்தியோகபூர்வமான அறிவித்து அவர்களை அழைத்து உபவேந்தர் அவர்களினது பொற்கரங்களினால் வழங்கப்பட்டது.




















No comments