இடிந்து விழுந்துள்ள வீதியின் ஒரு பகுதி!!
ஹாலி-எல எட்டாம்பிட்டிய பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, எட்டாம்பிட்டிய 2ஆம் தோட்டத்திற்கு செல்லும் வீதியின் ஒரு பகுதி இன்று (27) இடிந்து விழுந்துள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
வீதியின் தார் அடுக்குக்கு அடியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், இந்த வீதியில் பயணிப்பது ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது
No comments