Column Left

Vettri

Breaking News

அதிகரித்தது கொத்து, பிரைட் ரைஸ்ஸுன் விலை!!




 சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கையில், இந்த விலை அதிகரிப்பானது  செவ்வாய்க்கிழமை (18)  நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும், தேநீரின் விலை 05 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என  அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது


No comments