Column Left

Vettri

காரைதீவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா!!

(வி.ரி. சகாதேவராஜா)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபை "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே"  என்ற மகுடத்தின் கீழ் பரிசளிப்பு விழாவை நேற்று வியாழக்கிழமை காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நடத்தியது.

பிரதேச சபையின் செயலாளர் அ. சுந்தரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணன்  கலந்து சிறப்பித்தார் .
கௌரவ அதிதியாக ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

 
சிறப்பு அதிதிகளாக ஓய்நிலை ஆசிரியர்கள் திருமதி மோகனேஸ்வரி ஹரிஹரன் திருமதி கே. நடராஜா அதிபர்களான ச.ரகு நாதன் எஸ் ரவீந்திரன் மற்றும் ஆசிரியர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர் .

தேசிய வாசிப்பு மாதத்தை ஒட்டி பிரதேச சபை நடத்திய பேச்சு கட்டுரை கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன .


மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேறின.

 பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி திலகா பரமேஸ்வரன் நன்றி உரையாற்றினார்.









No comments