Column Left

Vettri

Breaking News

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-பொலிஸ் அத்தியட்சகர் பி. பண்டார!?




பாறுக் ஷிஹான்

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு பொதுமக்களின் உதவி கட்டாயம் தேவை.சமூகத்தில் எழுகின்ற  குற்றச் செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் உறவு  அவசியம். அதற்கு மக்கள் பாதுகாப்பு  உபதேசக்குழுக்கள்  வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை என  அம்பாறை அக்கரைப்பற்று பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பி. பண்டார தெரிவித்தார்.

காரைதீவு பொலிஸ்  பிரிவிற்கான  மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழு  கூட்டம்   வியாழக்கிழமை(26)  மாலை காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் தலைமையில் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்


மக்கள் பாதுகாப்பு உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு  வலுப்பெறும் சமூகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை.மக்கள் சுதந்திரமாக நிம்மதியாக பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக பொலிசார் கடமையாற்றி வருகின்றனர். எனினும்  பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் அது 100 வீதம் சாத்தியமாகாது. எனவே பொதுமக்கள் பொலிசார் உறவு முக்கியானது.அத்துடன் உபதேச குழுவின் வகிபாகம் பாரியது. அதன் அதிகாரம் வரையறையற்றது. முழுப் பொலிஸ் நிலையத்தை  கண்காணிக்க முடியும்.

நான் திருக்கோவிலில் இருந்தபோது அங்குள்ள மக்கள் பாதுகாப்பு உபதேசகுழுவே என்னை காப்பாற்றியது.
சட்ட விரோத செயற்பாடுகளையும் போதைப் பொருள் கடத்தலையும் இப்பிரதேசத்தில் முற்றாக தடை செய்யவேண்டும்.
தங்கள் உயிர்ப் பாதுகாப்பில் பொலிசாருக்கும் பங்குண்டு என்ற கடமை உணர்வுடன்  எமது கடமையினை செய்கிறோம். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்ப வழங்க முன்வர வேண்டும்.பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments