Column Left

Vettri

Breaking News

சுப முகூர்த்த வேளையில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கி வைப்பு!!






( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு  செட்டிபாளையம் சிவன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன நவகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேகத்துக்கான முதலாவது அழைப்போலையானது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்தினத்திற்கு நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் சி.ஸ்ரீதரனுக்கும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் அ.அறிவழகனுக்கும், களுவாஞ்சிகுடி இலங்கை மின்சார சபையினுடைய மின் அத்தியட்சகர்  ச.கௌசீகனுக்கும்வழங்கி வைக்கப்பட்டது .

மேலும் வங்கி முகாமையாளர்கள் உட்பட களுவாஞ்சிக்குடி பிரதேச அலுவலகங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கையிலேயே தென் திசை
நோக்கி தட்சிணாமூர்த்தியாக சிவலிங்க வடிவில் வேண்டுவோர் வேண்டியபடி அருள்பாலிக்கும் எம்பெருமானுக்கு குரோதி வருடம் தைத்திங்கள் 27 ஆம் நாள் (09.02.2025) ஞாயிற்றுக்கிழமை திருவாதிரை நட்சத்திர சுபமுகூர்த்த வேளையில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

இந் நிகழ்வில் சிவனாலய தலைவர் மு.பாலகிருஷ்ணன்  செயலாளர், உப தலைவர் உட்பட ஆலய நிருவாக சபையினர் கலந்து கொண்டனர்.

வெகு விரைவில் கட்டம் கட்டமாக அனைவருக்கும் அழைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை  நிருவாக சபை  மேற்கொண்டு வருகின்றது.

No comments