Column Left

Vettri

Breaking News

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகை அரிசி,அடுத்த வாரம் நாட்டிற்கு!!




 வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகை அரிசி,அடுத்த வாரம் நாட்டை வந்தடையுமென, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்யுமாறு அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய, பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இறக்குமதிக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து அரிசி ஒரு தொகை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த வாரத்திற்குள் அது நாட்டை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இறக்குமதியாளர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தது. இதன்படி அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, டிசம்பர் (04) முதல் (20) வரை அரிசியை இறக்குமதி செய்வதற்காக அனுமதியளிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய, கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசி ஒரு தொகை கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் நேற்றுக் காலை முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

No comments