Column Left

Vettri

Breaking News

வேலையற்ற பட்டதாரிகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான சகல முஸ்தீபுகளையும் மேற்கொள்வேன். - தாஹிர் எம்.பி!!





(எஸ். சினீஸ் கான்)

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (08) ஒலுவில் க்ரீன் வில்லா வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது பட்டதாரிகள், அரச தொழில் வாய்ப்பின்றி எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவ்வமைப்பினால் தெளிவு படுத்தப்பட்டது.

இதன் போது வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பிலான தகவல்கள், அரச தொழில் தொடர்பான தகவல்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான மாற்று தொழில் வழிகாட்டல்கள் தொடர்பிலும் முழுமையான தகவல்களை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், இது விடயம் தொடர்பில் பட்டதாரிகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான சகல முஸ்தீபுகளையும் தான் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்

No comments