செலிங்கோ லைஃப் அனுசரணையில் தாழங்குடாவில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு!!
செ.துஜியந்தன்
மட்டக்களப்பு செலிங்கோ லைஃப் கிளை அனுசரணையில் மண்முனைப்பற்று தாழங்குடா சிறி விநாயகர் வித்தியாலயத்தில் அழகியல் கற்கை நெறிக்கான வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக செலிங்கோ லைஃப் பொது முகாமையாளர் ரி.விஜயநாத் , வலய முகாமையாளர் எஸ்.வேணுகரன் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,
பாடசாலை சமுகம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இங்குள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இவ புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதாக செலிங்கோ லைஃப் வலய முகாமையாளர் வேணுகரன் தெரித்தார்
இங்கு பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள், செலிங்கோ லைஃப் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments